மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குமாக 86 புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பரீட்சைகள் திணைக்களத்தினால் கடந்த 2023 டிசம்பர் 02ஆந் திகதி நடாத்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி பிரதேச மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற 2100 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட கிரம சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவினால் புதன்கிழமை (08) அலரி மாளிகையில் வைத்து வழங்கப்ட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 325 கிரம சேவகர் பிரிவுகளில் நிலவும் 107 வெற்றிடங்களை நிரப்புவதற்காக 86 புதிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 17 பேரும், மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரிவிற்கு 13 பேரும், ஏறாவுர் பற்று செங்கலடி பிரிவிற்கு 11 பேரும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவிற்கு 10 பேரும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவிற்கு 7 பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஏறாவூர் நகர், மண்முனை வடக்கு மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுனதீவு, மண்முனைப் பற்று ஆரையம்பதி ஆகிய பிரிவுகளுக்கு தலா 5 பேரும், காத்தான்குடி மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தலா 2 பேருமாக 86 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இம்மாவட்டத்தில் மேலும் 21 கிரம சேவகர் பிரிவுகளுக்கான வெற்றிடம்நிருவுவது குறிப்பிடத்தக்கது.