மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு விழா – 2024
மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் சித்திரைப் புத்தாண்டு கலை கலாசார விளையாட்டு விழாவானது கழக தலைவர் நாகலிங்கம் பிரியதர்ஷன் தலைமையில் கடந்த சனிக்கிழமை 04 ம் திகதி குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் அறிவழகன், சட்டத்தரணி சிவப்பிரியா வில்வரத்னம் அம்மணி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதன் போது பாராம்பரிய விளையாட்டுகளான மரதன் ஓட்டப்போட்டி நிகழ்வானது குருக்கள்மடம் விவேகானந்தா பூங்காவில் இருந்து ,ஆரம்பமாகி களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயம் வரை சென்று , மீண்டும் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தை வந்தடைந்தது. மேலும் மைதான விளையாட்டுக்கள் பி.ப 2.30 மணியளவில் ஆரம்பமானது.
இதன்போது பாரம்பரிய விளையாட்டுக்களான தலையணை சமர், வழுக்குமரம் ஏறுதல் , மிட்டாய் ஓட்டம், சமநிலை ஓட்டம் ,சங்கீத சைக்கிள் சவாரி, முட்டி உடைத்தல்,கிடுகு பின்னுதல்,ஐஸ்கீரிம் உண்ணுதல் ,எனப்பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் அறிவழகன், மாவட்ட காச நோய் தடுப்பு அதிகாரி மேகலா ரவிச்சந்திரன், ஆலயக் குருமார் , கிராம பொது நிர்வாக அமைப்புகளில் பிரதிநிதிகள் ,கிராம பொதுமக்கள் நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்து சிறப்பித்தனர்.