முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிற்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட உள்ளது.
தரம் குறைந்த மருந்து வகைகளை விநியோகம் செய்து அப்பாவி நோயாளிகளுக்கு உயிராபத்து ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத்தொடர்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தரம் குறைந்த மருந்து பொருட்களினால் சில மரணங்கள் பதிவானதுடன் 100க்கும் மேற்பட்டவர்கள் ஊனமுற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்பய்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய உள்ளிட்டவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் பூரண ஒத்துழைப்புடன் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குற்ற விசாரணைப்பிரிவு அறிவித்துள்ளது.