இலங்கையில் இளைஞர்களிடையே டினியா (Tinea) எனப்படும் தோல்நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுக்கமான நைலோன் கலந்த ஆடைகளை அணிவதனால் இந்த நோய் நிலைமை ஏற்படுவதாகவும் பூஞ்சை தொற்றினால் இந்த தோல்நோய் பரவுவதாகவும் தோல்நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் நயனி மாதாரசிங்க தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த வைத்தியர்களிடம் இதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.