ஓமானில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
நேற்று சனிக்கிழமை (12) கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன .
கைது செய்யப்பட்டவர் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் என்பதுடன் இவர் ஓமானில் “காபி” கடை ஒன்றை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது .
இவர் இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார் .
அத்துடன் 10,000 “மான்செஸ்டர்” வகை சிகரெட்டுகள் அடங்கிய 50 சிகரெட் பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக தெரியவிக்கப்பட்டுள்ளது .
குறித்த நபர் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் .