சிறிய ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலையை அமைப்பது குறித்து இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு நிபுணத்துவம் உள்ளதாகவும் இலங்கை உற்பத்தி தொழில்துறை குறித்து கவனம் செலுத்தவேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான தொடர்பு நன்றாகவும் உயர் மட்டத்திலும் உள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் உற்பத்திப் பிரிவு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கை கவனிக்க வேண்டிய ஒரு முன்மாதிரி இது, அதிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும், ”என்று அவர் மேலும் கூறினார்.