புத்தளம் – எலுவாங்குளம், கலா ஓயா பாலத்தை ஊடறுத்து வௌ்ளம் பாய்வதால், குறித்த பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால், கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
இதனால், வில்பத்து சரணாலயத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் வில்பத்து சணாலயத்திற்கு குறித்த வீதியூடாக செல்ல வேண்டாமென வனஜீவராசிகள் திணைக்களத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.