இலங்கை பொலிஸாருக்கு அமெரிக்காவில் விசேட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அரச சொத்துக்களை கொள்ளையிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு விசேட பயிற்சிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களை கைது செய்ய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கோஷங்களை எழுப்புவதன் மூலம் கள்வர்களை பிடித்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முறையான பயிற்சிகளைப் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கள்வர்களை கைது செய்வதற்கான நிதி குற்றச் செயல் தடுப்பு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டதாகவும் அவற்றினால் கள்வர்களை பிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கள்வர்களை பிடிக்கவில்லை என தம்மீது குற்றம் சுமத்துவதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தாகளுக்கு பயிற்சிகளை வழங்க அமெரிக்கா இணங்கியுள்ளதாகவும் கள்வர்களை பிடிக்க இன்னும் இரண்டாண்டு காலம் தேவைப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.