Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியின் புதிய கண்டுபிடிப்பு!

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியின் புதிய கண்டுபிடிப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், தொழில்நுட்பம்

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான புதிய வழி முறையை சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், இதுவரை எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த ஆராய்ச்சிகள் தோல்வியடைய ஒரு முக்கிய காரணம், இறந்தவரின் மூளையை பாதுகாக்க முடியாமையே ஆகும்.

இந்நிலையில், சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய கிரையோஜெனிக் உறைவிப்பான் அமைப்பு, இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நம்பிக்கைக்கு புதிய பாதையை வகுத்துள்ளது.

சீனாவின் ஃபுடான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு கிரையோஜெனிக் உறைவிப்பான் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த உறைவிப்பானானது மிகக் குறைந்த வெப்பநிலையில் மூளை திசுக்களை உறைய வைப்பதுடன் அதை மீண்டும் இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MEDY என்று பெயரிடப்பட்ட இந்த மருந்தை உறைவிப்பானில் இருந்து வெளியே எடுத்த பிறகு மூளையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாமல், முன்பு போலவே அனைத்து செயல்பாடுகளும் நடந்ததாக ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிசெங் ஷோ கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறந்தவரின் அனைத்து உறுப்புகளையும் குறிப்பிட்ட வெப்பநிலையுடன் கிரையோஜெனிக் உறைவிப்பான்களில் வைப்பதன் மூலம் பல ஆண்டுகள் பாதுகாக்க முடியும். எனினும், மூளையில் 80 சதவீதம் நீர் இருப்பதன் காரணமாக அவ்வாறு பாதுகாக்க முடியாது.

மூளை சாதாரண உடல் உறைவிப்பான்களில் சேமிக்கப்பட்டால், மூளை திசுக்களில் உள்ள நீர் உறைந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். வெப்பநிலை இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, ​​மூளை அதன் முந்தைய செயல்பாடுகளைச் செய்யாது. இதற்கு ஒரு சிறப்பு கிரையோஜெனிக் உறைவிப்பான் தேவைப்பட்டது.

அந்தவகையில், Methylcellulose, Mthylene glycol, DMSO and Y27632 ஆகிய சிறப்பு இரசாயனங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது MEDY என பெயரிடப்பட்டுள்ளதுடன், இவை மூளையைப் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது” என கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சி மூலம், மூளையை பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம் கிடைத்துள்ளதுடன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் நம்பிக்கைக்கு பலம் சேர்த்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
Next Post
லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டெனிஸ் சுற்றுப் போட்டி!

லேக் வியூ டெனிஸ் சென்டரின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டெனிஸ் சுற்றுப் போட்டி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு