வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
நாடு மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக, நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலைமைகள் மேலும் தொடரும்.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
தீவின் மீது அவ்வப்போது (30-40) kmph வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.