தொடரும் மழையால் வயிற்றுப்போக்கு நோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானசாலை வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு பொதுச் சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
மழையால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வெசாக் பண்டிகைக்கு தானசாலையை வழங்கும் விகாரைகள் போயா தினத்திற்கு முதல் நாள் பதிவு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானசாலை வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.