Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் மருந்துத் தட்டுப்பாடு உள்ளதா இல்லையா?; ஆய்வு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கையில் மருந்துத் தட்டுப்பாடு உள்ளதா இல்லையா?; ஆய்வு நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதா இல்லையா என்பது குறித்தும், சுகாதார ஊழியர் இடமாற்றக் கொள்கை குறித்தும் இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளை அழைக்க ஒன்றியம் தீர்மானித்தது.

இலங்கை மருத்துவ பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தலைமையில் அண்மையில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளதா இல்லையா என்பது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைப்பதற்கும் அதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் ஒன்றியத்தின் உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.

பல சுகாதாரப் பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்வதால், மருத்துவ நிபுணர்கள் மற்றும் சிறு ஊழியர்களின் இடமாற்றக் கொள்கை முறையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.

வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன அவர்கள், நாட்டில் போதியளவு ஊட்டச்சத்து நிபுணர்கள் இல்லை என தெரிவித்ததுடன், உள்நாட்டில் ஊட்டச்சத்து நிபுணர்களை உருவாக்கத் தேவையான பொருத்தமான முறைமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

வைத்தியகலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவர்கள், இயலாமையுடைய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளுக்கு ஒன்றியம் ஆதரவளிக்க வேண்டும் என்றும், இத்துறையில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பணி மற்றும் மேற்பார்வை குறித்தும் ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான வைத்தியகலாநிதி சீதா ஆரம்பேபொல, வைத்தியகலாநிதி ராஜித சேனாரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் வைத்தியகலாநிதி திலக் ராஜபக்ஷஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
இரட்டை குடியுரிமை கொண்ட எந்த எம்.பியும் நாடாளுமன்றத்தில் இல்லை; அடித்துக்கூறும் பாதுகாப்பு அமைச்சர்!

இரட்டை குடியுரிமை கொண்ட எந்த எம்.பியும் நாடாளுமன்றத்தில் இல்லை; அடித்துக்கூறும் பாதுகாப்பு அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு