இரட்டை குடியுரிமையுடைய எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை குடிவரவு குடியாகல்வு திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எவ்வாறாயினும் வெளிநாடு குடியுரிமையை பெற்றுக்கொண்டவர்கள் இலங்கை பிரஜை என்ற போர்வையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க கூடும்.
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்றது.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமையை வகிக்கின்றார்களா என பெபரல் அமைப்பு தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக கேள்வி எழுப்பியிருந்தது.
எனினும் இந்த கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு ஒருவர் இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொண்டிருந்தால் அல்லது அதற்காக விண்ணப்பம் செய்திருந்தால் குடிவர குடியகல்வு திணைக்களத்திற்கு தெரிந்திருக்கும்.
இதன்படி, இலங்கை குடிவரவு குடியரசு திணைக்களத்தின் தகவல்களின் பிரகாரம் எவரும் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்ளவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.