செங்கடலில் சென்று கொண்டிருந்த பனாமா எண்ணெய்க் கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
உந்துகணைத் தாக்குதலால் கப்பலில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் சில அறைகளில் கடல் நீர் உட் புகுந்துள்ளது. இருப்பினும் மாலுமிகள் விரைவாக செயல்பட்டு கப்பலை வழமை நிலைக்கு கொண்டுவந்து கடலில் செலுத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
தாக்குதலினால் கப்பலில் உள்ள ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்பதுடன் கப்பல் தாக்கப்பட்ட போது சுற்றுக்காவலில் அமெரிக்க இராணுவக் கப்பல் இருந்ததாகவும், தாக்கப்பட்ட கப்பலுக்குத் தேவையான உதவிகளை செய்யத் தயார் நிலையில் அவர்கள் இருந்ததாகவும் வாஷிங்டன் தெரிவித்துள்ளது.