நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த போராட்டமானது எதிர்வரும் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.
உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை 15 பிரிவினரை விடுத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையின் 72 தொழிற்சங்கங்கள் கடந்த நாட்களில் மாகாண மட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தன.
பொருளாதார நீதியை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வை வழங்குவதாகக் கூறியபோதிலும், அதனை நிறைவேற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார தொழிற்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.