கடந்த 19.05.2024 அன்று அசர்பைஜான் எல்லையில் ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி,ஈரான் வெளிவிவகார அமைச்சர் காலநிதி ஹீசைன் அமீர் அப்துல்லாஹியான் உள்ளிட்ட எட்டு உயர் அதிகாரிகளின் திடீர் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு மன்ப உல் ஹூதா அரபுக் கல்லூரி மீராவோடை ஓட்டமாவடியில் நடைபெற்றது.
அரபுக் கல்லூரி அதிபர் ஏ.பி.மர்வான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மரணித்தவர்களின் மண்ணறை வாழ்வுக்காக கத்முல் குர்ஆன் ஓதப்பட்டது.
தொடர்ந்து கல்லூரியின் இஸ்த்தாபகர் அல்ஹாஜ் எல்.ரி.எம்.இஸ்ஹா பஹ்ஜி அவர்களால் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது.
உயிர் நீத்தவர்களுக்கு இறைவன் இம்மையிலும் மறுமையிலும் கண்ணியத்தினையும் சுவனத்தினையும் வழங்கும்படி பிராத்தித்துக் கொண்டார்.அவர் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் தனித்துவமாக விளங்கி உலகின் ஒதுக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்குக்காய் குரல் கொடுத்த ஓர் உன்னத தலைவர் எனவும் கூறினார்.
அத்துடன் எமது நாட்டின் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கியமை தொடர்பாகவும் நினைவு கூறப்பட்டது.
இதேவேளை துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக ஓட்டமாவடி,வாழைச்சேனை ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு, உயிர் நீத்தவர்களின் உருவப் படங்கள் தாங்கிய பெனர்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.