பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தின நிகழ்வுகள் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றையதினம் (23) கோலாகலமாக ஆரம்பமானது.
இந்த நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு 59 வது காலாட் படையினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் ஞானம் பெறும் நிலையில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தது.
குறித்த வெசாக் கொண்டாட்டத்தில் சாதி, மதம், இன வேறுபாடு கடந்து சிறுவர்கள், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வெசாக் தினத்தினை முன்னிட்டு நேற்றும் , இன்றும் (23,24) புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் உணவு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.