Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவன்- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாக்கள் கைது!

சிறுவன்- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; சித்தப்பாக்கள் கைது!

2 years ago
in செய்திகள்

சிறுவன் ஒருவனையும் சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவ்விருவரின் சித்தப்பாக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் ​மொனராகலை மற்றும் வெல்லவாய ஆகிய இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன.

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தேகடுவ தெனகல்லந்த பிரதேசத்தில் வசிக்கும் எட்டு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனின் சிறிய தந்தையை மொனராகலை பொலிஸார் கடந்த (25) கைது செய்துள்ளனர்.

சிறுவனின் தாத்தாவின் வீட்டில் வசிக்கும் அச்சிறுவனை, தாத்தா இல்லாத பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்த மொனராகலை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி சர்மிந்த சஞ்சீவ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவில் வசிக்கும் பதின்மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியின் சிறிய தந்தை ஒருவரும், கடந்த (25) கைது செய்யப்பட்டதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை மற்றும் தாய் வேறு கிராமங்களில் வசிக்கின்றனர். சிறுமி, தன்னுடைய பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்துவருகின்றார்.

32 வயதான சித்தப்பா, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபற்றி பாட்டியிடம் தெரிவித்ததையடுத்து, அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
தம்பியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!

தம்பியுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு