எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உந்துருளிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டர் எரிபொருள் ஒதுக்கப்படும், அதே நேரத்தில் மகிழுந்துகளுக்கு வாரத்திற்கு 40 லீட்டர் ஒடுக்கப்படும்.
மேலும், வான்களுக்கான நடைமுறையில் உள்ள 30 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் 40 லீற்றராக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், பேருந்துகளுக்கான 60 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு வாரத்திற்கு 125 லீட்டராகவும், கனரக வாகனங்களுக்கான ஒதுக்கீடு 125 லீட்டராகவும் உயர்த்தப்படவுள்ளது.