Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குவைத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன்; மரணத்தில் சந்தேகப்படும் குடும்பம்!

குவைத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன்; மரணத்தில் சந்தேகப்படும் குடும்பம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

குவைத்க்கு தொழிலுக்காக சென்றிருந்தபோது உயிரிழந்த 27 வயதான இலங்கை இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை வெளிக்கொண்டு வருமாறு இளைஞனின் உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீகிரியா இலுக்வல பகுதியில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்ற இளைஞன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சகோதரியான ஷஷினி மல்சானி, கடந்த 20ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்ததாக தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் இன்றையதினம் (28) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக ஷஷினி மல்சனி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞனின் மரணம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக மீண்டும் வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாகவும், வீட்டின் களஞ்சிய அறையொன்றில் அவர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கும் சிறிய காணொளி ஒன்று வாட்ஸ் அப் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் இளைஞன் எழுதிய கடிதம் ஒன்று இளைஞனின் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்டதாகவும், உயிரை மாய்த்துக்கொள்வதாக தனது தாயாருக்கு அதில் எழுதியிருந்ததாகவும் வாட்ஸ்அப் ஊடாக குறித்த கடிதம் கிடைத்ததாகவும் சகோதரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளைஞனின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

எனக்கு அரபு மொழி நன்றாக பேசத் தெரியும். அந்த வீட்டின் உரிமையாளரிடம் பேசினேன். உங்களது மகன் கார் விபத்தில் சிக்கி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தெரிவித்தார்.

அவருக்கு பாரிய சேதங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சந்தருவானுக்கு பிரச்சனை இல்லாத காரணத்தால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்
செய்திகள்

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள்

August 19, 2026
அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும ஆகஸ்ட் மாத கொடுப்பனவு இன்று பயனாளிகளின் கணக்குகளில்!

August 19, 2026
2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!
செய்திகள்

2028க்கு பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார சவாலை எதிர்கொள்ளலாம்; ரணில் எச்சரிக்கை!

August 19, 2026
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!
செய்திகள்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்!

August 19, 2026
பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!
செய்திகள்

பளையில் விடுதலைப் புலிகள் முகாம் என போலித் தகவல் பரப்பியவர் கைது!

August 19, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு ரூ. 5,000 மாதாந்தக் கொடுப்பனவு

August 19, 2026
Next Post
மீன்பிடி நடவடிக்கைகள் குறைவதால் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு!

மீன்பிடி நடவடிக்கைகள் குறைவதால் இறைச்சிகளின் விலை அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு