ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டு சந்தேகத்தின் பேரில் கொழும்பில், கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவே, இவர்களை கைது செய்துள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/441498625_986031873149269_2821649705403696242_n.jpg)
கைது செய்யப்பட்ட சகோதரர்களில் ஒருவர் மாகாணம் ஒன்றில் மீன்பிடி துறைமுகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், மற்றைய சகோதரர் கொழும்பிலுள்ள கொள்கலன் பிரிவில் தொழில் செய்பவரெனவும் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் சமீபத்தில் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.
இவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இவ்விரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.