மட்டக்களப்பு வெளிச்ச வீட்டு கோபுரத்தின் புனர்நிர்மாணப் பணிகளின் அங்குராப்பன நிகழ்வு வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடற்றொலில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு கடற்கரை கோபுர புனர்நிர்மாணப்பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
16 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெறவுள்ள புனர்நிர்மான பணிகளுக்காக 11 மில்லியன் நிதியினை கடற்றொழில் அமைச்சும் 5 மில்லியன் நிதியினை கிழக்கு மாகாண ஆளுநனரும் வழங்கியுள்ளார்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1304.png)
இப்பிரதேச மீனவ சமூகம் எதிர் நோக்கிய பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டதுடன் கலன்கரை விளக்கும் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம், ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர் சிவானந்தராஜா, மாநகரசபை பொறியியலாளர், மீன்பிடி திணைக்களத்தின் பணிப்பாளர் என பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1305.png)
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒன்றினைந்து மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.