மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிபில பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/05/image-1347.png)
இவ்வாறு உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.
உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.