Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிக்குவை 12 மணிநேரம் காக்க வைத்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன!

பிக்குவை 12 மணிநேரம் காக்க வைத்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன!

3 years ago
in செய்திகள்

இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தாய்லாந்து பயணம் காரணமாக, மேற்கு அவுஸ்திரேலியாவின் தேரவாத பௌத்த பிக்குவான வணக்கத்துக்குரிய அஜான் பிரம்மவன்ச தேரர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணிநேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம், கடந்த (30.05.2023) அன்று இடம்பெற்றுள்ளதாக நேற்றைய தினம் (01.06.2023) ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வணக்கத்துக்குரிய தேரர் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் ஊடாக பேங்கொக் செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இரவு 10 மணிக்குச் சென்றடைந்து அங்கு முக்கிய பிரமுகர் செல்லும் பகுதியில் காத்திருந்துள்ளனர்.

இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தனவும் சில அமைச்சர்களும் அதே விமானத்தில் தாய்லாந்து செல்வதற்காக சம்பவத்தினமான இரவு 12 மணிக்கு விமான நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், பிரதமர் மற்றும் தூதுக்குழுவினர் விமானத்தில் ஏறுவதற்காக அதிகாலை 2.30 அளவில் சிறப்பு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் ஓய்வறையில் இருந்த வணக்கத்துக்குரிய பிரம்மவன்சோ தேரரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் காலை 7 மணியளவில் விமானம் ஒன்றில் அனுப்பப்படவிருந்தபோதும், அதுவும் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மறுநாள் முற்பகல் 10.45க்கு மலேசியாவின் கோலாலம்பூருக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானத்தில் தேரர் அனுப்பப்பட்டுள்ளார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், தேரர் முதலில் பேங்காக் அல்லது வேறு எந்த இடம் ஒன்றுக்காகச் செல்வதற்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் முன்பதிவு செய்யப்படவில்லை, மாறாக வேறு ஒரு விமானத்திலேயே முன்பதிவு செய்திருந்தார் என்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

2023 மே 31ஆம் திகதி அதிகாலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் துரதிர்ஷ்டவசமான தாமதம் ஏற்பட்டபோது, உடனடியாக செயற்பட்டு, மாற்று விமானத்துக்கான உதவியை வழங்கியதாகவும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்; விரைவில் விஸ்தரிப்பு பணிகள்!

யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்; விரைவில் விஸ்தரிப்பு பணிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு