விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தமது 90ஆவது வயதில் நேற்று (07) உயிரிழந்தள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் சியாட்டில் நகரின் வடக்கே அவர் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று வாவியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதனைத் தாங்கி சந்திரனுக்கு சென்ற அப்பல்லோ 8 (Apollo 8) விண்கலத்தின் விண்வெளி வீரர்களுள் ஒருவராக செயற்பட்டிருந்தார்.
இதன்போது ஏர்த்ரைஸ் எனப்படும் சந்திரனின் அடிவானத்திலிருந்து பூமி உயரும் காட்சியை சந்திரனின் மேற்பரப்பிலிருந்து புகைப்படம் பிடித்திருந்தார்.
இந்தப் புகைப்படம் வரலாற்றில் மிக முக்கியமான புகைப்படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டதுடன் லைஃப் இதழின் உலகத்தை மாற்றிய 100 புகைப்படங்களுள் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.