Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்!

மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்!

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பல்லாயிரம் பேர் தீயில் இறங்கிய புன்னைச்சோலை தீமிதிப்பு உற்சவம் – வெள்ளைக்காரர்களும் தீயில் இறங்கி நேர்கடன் செலுத்தினர்.

இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பண்ணெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் உற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் புதன்கிழமை அன்னையின் கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினையும் மகிமையினையும் கொண்ட ஆலயமாக இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பில் பிற்பகல் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் கடல்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பு உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இந்த தீமதிப்பு உற்சவத்தில் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டு தீயில் இறங்கி நேர்கடன்களை செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
Next Post
யாழில் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து காலால் உதைத்த பொலிஸார்!

யாழில் பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து காலால் உதைத்த பொலிஸார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு