அமெரிக்காவில் , புதியவகை விஷ சிலந்திகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
4 அங்குல நீளமான கால்கள் கொண்ட இந்த பெரிய சிலந்திகள் மற்ற சிலந்திகளைப் போல் அல்லாமல் பறக்கும் திறன் கொண்டவை எனவும் குறிப்பாக இந்த சிலந்திகள் உற்பத்தி செய்யும் பட்டு நூல்களை காற்றில் வீசுவதன் மூலம் பறக்கும் திறனைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிரகாசமான மஞ்சள் மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும் ”ஜோரோ” என்று அழைக்கப்படும் இந்த சிலந்திகள் கடந்த ஒக்டோபரில் ஆக்கிரமிப்பு இன நிபுணர் டேவிட் கோய்ல் வெளியிட்ட ஆய்வில் ஆசியாவைச் சேர்ந்தவை என கூறப்பட்டுள்ளது.
இந்த சிலந்திகள் 2010 இல் வடக்கு ஜோர்ஜியாவில் காணப்பட்ட நிலையில் 2022 முதல் நியுயோர்க் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் புளோரிடா, அலபாமா, மிசிசிப்பி , கரோலினாஸ், டென்னசி, கென்டக்கி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, மேரிலாந்து மற்றும் ஓஹியோ உள்ளிட்ட கிழக்கு அமெரிக்காவின் பல பகுதிகளில் ஜோரோ சிலந்திகளைப் பார்த்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சிலந்திகள் மற்ற சிலந்திகளுக்கு விரோதமான சூழலில் கூட உயிர்வாழ முடியும் என்று டேவிட் கோய்ல் குறிப்பி்ட்டுள்ளார்.