மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்) அமைப்புடன் தொடா்புடைய பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 41 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
வடக்குப் பகுதி மாகாணமான கிவுவின் மாசலா, மஹிஹி, கேமே ஆகிய கிராமங்களுக்கு வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவா்களைப் படுகொலை செய்ததாக அதிகாரிகள் கூறினா்.
தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் அரசு அதிகாரிகளோ, பாதுகாப்புப் படையினரோ இல்லாததால் அங்கு பயங்கரவாதிகளால் சுதந்திரமாக படுகொலைகளில் ஈடுபடுவதாக உள்ளூா்வாசிகள் குற்றஞ்சாட்டினா்.
காங்கோவில் 120-க்கும் மேற்பட்ட ஆயுதக் குழுக்கள் பல ஆண்டுகளாக ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுவருகின்றன. இதில் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துவருகின்றனா்.