கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அண்மையில், இலங்கைத் தமிழரான பிரம்டன் நகரை சேர்ந்த 43 வயதான பிரசன்னா – காலிங்கராஜன் என்பவர் மீது குற்றச் சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக யோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொரான்டோ பெரும்பாகத்தில் அமைந்துள்ள திரையரங்க துப்பாக்கி சுட்டு சம்பவங்களின் இரண்டாவது சந்தேக நபராக இலங்கைத தமிழர் கருதப்படுகிறார்.
தமிழருக்கு சொந்தமான திரையரங்கு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நான்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது நபராக பிரசன்னா – காலிங்கராஜன் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அதேவேளை கடந்த ஜனவரி 24ஆம் திகதி டொரான்டோ பெரும்பாகத்தில் உள்ள வெவ்வேறு திரையரங்குகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மார்கம் நகரைச் சேர்ந்த 27 வயதான Andrew Douglas என்பவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, மே 22ஆம் திகதி இலங்கைத் தமிழரான பிரசன்னா காலிங்கராஜனுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இவர்களுக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்த விபரங்களையும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.
அதேசமயம் ஸ்காபரோவில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழ்ந்துவரும் நிலையில் அங்குள்ள தமிழர்களின் திரையரங்கில் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.