கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஒண்டாரியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த இரண்டாம் (02) திகதி அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – நயினாதீவை வசிப்பிடமாக கொண்ட 25 வயதான ஜெயகுமார் தனோஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நள்ளிரவில் வேகமாக பயணித்த வாகனம் கொங்ரீட் தூணில் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாகனம் மோதியதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒண்டாரியோ மாகாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.