குருநாகலில் தனது தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி காதலிக்கு செலவு செய்த மகன் மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காதலியின் தந்தையிடம் திருடிய நகைகளை அரச வங்கியில் அடகு வைப்பதற்காக சென்ற போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்க நகை மற்றும் பணத்தை பத்திரமாக வைத்து விட்டு தந்தை தனது தொழில் நிமித்தமாக வெளியே சென்றுள்ளார்.
இதன்போது மகன் அதனை திருடிக் கொண்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் அதனை அடகு வைப்பதற்காக செல்வதாக தந்தைக்கு கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது, அடகு வைக்கப்படவிருந்த 03 சங்கிலிகள், 04 மோதிரங்கள், 03 பென்டன்ட்கள், ஒரு கைச் சங்கிலி மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தப் பணத்தில் தன் காதலிக்கு பரிசுகள் வாங்கத் தயாராக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் திருடப்பட்ட 58,000 ரூபாய் பணத்தில் ஐந்நூறு ரூபாய்க்கும் குறைவாகவே வைத்திருந்துள்ளார்.
எல்லாவற்றையும் செலவழித்து காதலிக்கு ஒரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இரண்டு பவர் பேங்க் வாங்கிக் கொடுத்துள்ளார்.
23 வயதான சந்தேக நபர் மூன்று வன்முறை குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், சந்தேகநபர்கள் இருவரும் கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.