Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்!

கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை திறக்கப்படும் திகதியில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இப் பாதை திறக்கப்படும் திகதி ஜூலை 2 ஆம் திகதி எனக் கூறப்பட்டுள்ளது .

கதிர்காமத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம் பெற்ற கூட்டத்தில் இத் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 2 ஆம் திகதி திறக்கப்பட்டு 14 ஆம் திகதி மூடப்படும் என்று மொனராகலை மாவட்ட அரசாங்க அதிபர் ரத்னாயக்க அறிவித்திருக்கிறார்.

இதனால் பாதயாத்திரை மேற்கொள்ளும் இந்து அடியார்கள் குழப்பமடைந்துள்ளனர்.

குறித்த நாட்களில் காட்டைக் கடந்து கொடியேற்றத்திற்குச் செல்ல முடியாது. எனவே இந்த நாட்குறைப்பு திட்டமிட்ட ஒரு சதியாகக் கூட இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்தக் காலத்தில் இப் புனித யாத்திரை பக்தி பூர்வமாக கொடியேற்றத்திற்கு பத்து நாட்களுக்கு முன்னரே திறக்கப்பட்டு எந்த அன்னதானமோ நீர் விநியோகமோ இல்லாது சிறப்பாக இடம்பெற்று வந்திருக்கிறது. (சுமார் 20 நாட்கள் காட்டுப் பாதை திறந்திருக்கும்)

ஆனால் தற்போது செலவைக் பொறுத்து திறக்கப்படும் நாட்கள் தீர்மானிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலை அதுவும் மொனராகலையில் ஒரு திகதி, அம்பாறையில் ஒரு திகதி. இதற்காக லாகுகலை பிரதேச செயலகம் நிதி சேகரிக்கின்றது.

நீர் வழங்கலுக்காக இன்னும் சில தொண்டு அமைப்புகளும் நிதி சேகரிக்கின்றன. என்ன நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியாமல் உள்ளது. “கூட நாட்கள் திறந்தால் செலவு அதிகம். நாங்கள் மூன்று நாட்களில் சென்றிருக்கிறோம்” என்று கதிர்காமக் கூட்டத்தில் ஓர் அதிகாரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் இம்முறை இவ்வாறாக முரண்பாடு ஏற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் இப் பாதயாத்திரையை முடக்கும் செயற்பாடாக இருக்கலாமோ என இந்துக்கள் அச்சப் படுகின்றனர்.

அதேசமயம் உகந்தை மற்றும் கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 22 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
Next Post
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு