Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அறிமுகமாகும் புதிய அடையாள அட்டை!

இலங்கையில் அறிமுகமாகும் புதிய அடையாள அட்டை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

எனினும், தற்போது வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு வழமை போன்று இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு நாள் சேவை அல்லது பொதுச் சேவைகளின் கீழ் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் இதனை பெறலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்குவது தேசிய தரவு முறைமை தயாரிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
வீடு உடைத்து நகை திருடிய வன்முறை கும்பல்; யாழில் சம்பவம்!

வீடு உடைத்து நகை திருடிய வன்முறை கும்பல்; யாழில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு