ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய 20 இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய 20இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு நகர் மற்றும் ஆரையம்பதி பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நகரில் உள்ள பஸ் நிலையங்கள்,வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை என்பனவற்றிலும் ஆரையம்பதியில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை ஆகியவற்றிலும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தொடர்ந்து வீடுகளுக்கு சென்று புதிய அங்கத்தவர்களை இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தயானந்தன் தெரிவித்தார்.
இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சி தலைவராகயிருந்து பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஒரேயொரு தலைவராக சஜித் பிரேமதாசவேயிருக்கின்றார்.எதிர்க்காலத்தில் எமது மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
யாழில் எதிர்க்கட்சி தலைவர் தமிழரசுக்கட்சி கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நிச்சயமாக வடகிழக்கு தமிழர்கள் எமது எதிர்க்கட்சி தலைவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பாளர்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என இதன்போது மாவட்ட அமைப்பாளர் தயானந்தன் தெரிவித்தார்.