அபுதாபியில் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாற்று எரிசக்தி வசதிகளை பயன்படுத்துவதைற்கும் பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், அமெரிக்காவின் அர்ச்சர் நிறுவனத்தின் மிட்நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டெக்சி சேவைக்காக இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், அபுதாபியில் பறக்கும் டாக்ஸி சேவை வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானம் மேற்புறம் மற்றும் இருபுறமும் சுழலும் இறக்கைகளை வைத்துள்ளதால் உலக்குவானூர்தி போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க முடியும் என கூறப்படுகிறது.
அத்துடன், சோதனை ஓட்டத்தின்போது குறித்த பறக்கும் விமான டெக்சியானது, மணிக்கு 360 கி.மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது.
மேலும், விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அபுதாபியில் இந்த டெக்சி திட்டம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.