Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட வேலைத்திட்டம்; முல்லைத்தீவில் 29,000 ஏக்கர் காணி விடுவிப்பு!

ஜனாதிபதி செயலாளர் தலைமையில் விசேட வேலைத்திட்டம்; முல்லைத்தீவில் 29,000 ஏக்கர் காணி விடுவிப்பு!

2 years ago
in முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்கள் தற்போது பயன்படுத்தும் 29 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு வனவளத் திணைக்களம் இணங்கியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில்காணப்படும் காணிப் பிரச்சினைகள்தொடர்பான முக்கிய கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட பதில் செயலர் க. கனகேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, “கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஓயாமுதலிய மாவட்டத்தின் ஆறு பிரதேசசெயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் முன்னர் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவித்தல் தொடர்பில் மீள் வர்த்தமானி உருவாக்கத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முன்னர் மக்கள் பயன்பாட்டில் இருந்த17 ஆயிரம் ஏக்கர் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்படாமல் பற்றைகளும், காடுகளுமாக காணப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வைப் பெற்றும் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில்தேசிய குழு ஒன்று நியமிக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்”- என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நந்திக்கடல், கொக்கிளாய், சுண்டிக்குளம், நாயாறு ஆகிய இடங்களிலும் மக்கள் பாவனைக்குக் காணிகளை
விடுவிப்பது தொடர்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வன உயிரிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் சமந்தி, வன உயிரிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மஞ்சுள, வன வளத்திணைக்களத்தின் நாயகம், மேலதிக மாவட்டசெயலாளர் எஸ்.குணபாலன், மாவட்ட உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையில் பிரவுன் வுட் என்ற அரியவகை ஆந்தை கண்டுபிடிப்பு

May 18, 2025
மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயித்தியமலை பொலிஸ் அதிகாரி கைது

May 18, 2025
“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்
செய்திகள்

“மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்”; தவெக தலைவர் விஜய்

May 18, 2025
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது
செய்திகள்

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

May 18, 2025
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி பயணிக்கும் சிறைக்கூடு

May 18, 2025
மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு
செய்திகள்

மட்டு காந்திபூங்காவில் இன அழிப்பு வாரத்தின் இறுதி நிகழ்வு

May 18, 2025
Next Post
முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

முதல் 5 மாதங்களில், 5 இலட்சத்தை கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு