விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் காலத்தில் இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறார் புற்றுநோய் மற்றும் இம்யூனோகுளோபுலின் மருந்துகள் பழச்சாறு பொருட்கள் மற்றும் பால் பாக்கெட் உற்பத்தி இயந்திரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டதாக சமீபத்திய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
குறித்த மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனம் இலங்கைக்கு மருந்து உற்பத்தி தொடர்பான இயந்திரங்களை ஒருபோதும் இறக்குமதி செய்யவில்லை எனவும் 2017-2021 காலப்பகுதியில் குறித்த நிறுவனம் பழச்சாறு உற்பத்தி இயந்திரத்தை மாத்திரமே இறக்குமதி செய்துள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பால் சேமிப்பு சாதனம், சுங்கம் மூலம் உயிர் ஆதரவு உபகரணங்கள் போன்றவற்றையே இறக்குமதி செய்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
2023 ஏப்ரலில் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்ததாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மருந்து உற்பத்திக்கு ஏற்ற வசதிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் இந்த நிறுவனம் பழசாறு செய்யும் இயந்திரத்திலா புற்றுநோய் மற்றும் இம்யூனோகுளோபுலின் மருந்துகள் தயார் செய்தது ஈன்ற சந்தேகம் எழுந்தது.