விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினாலேயே குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 பொலிஸாரை கொன்றமை தொடர்பில் கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் 600 பொலிஸாரின் கொலையை கருணா தான் செய்ததாக பெங்களூரை சேர்ந்த பேராசிரியரும், திருக்கோவில் முகாமில் இருந்த முன்னாள் சிறப்பு அதிரடிப்படை வீரருமான ஜனித் சமிலாவும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஜூன் 11, 1990 அன்று நடந்த இக்கொலை சம்பவம் குறித்து எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என்பதும், படுகொலையில் இரண்டு காவலர்கள் மட்டுமே உயிர் தப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.