அமெரிக்காவில் இதுநாள்வரை நடைபெற்ற ரி 20 உலககிண்ண ஆரம்ப ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது சுப்பர் 08 சுற்றுக்களுக்கான போட்டிகள் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறவுள்ளன.
இதில் எவருமே எதிர்பார்க்காத அமெரிக்க அணி சுப்பர் 08 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி அணிகளின் நிலைகள் வருமாறு, இந்தியா (குரூப் ஏ), அமெரிக்கா (குரூப் ஏ), அவுஸ்திரேலியா (குரூப் பி), இங்கிலாந்து (குரூப் பி), ஆப்கானிஸ்தான் (குரூப் சி), மேற்கிந்திய தீவுகள் (குரூப் சி), தென் ஆபிரிக்கா (குரூப் டி) மற்றும் பங்களாதேஷ் (குரூப் டி).
இந்தியா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்றின் குரூப் 1ல் இடம்பெறும் அதே சமயம் மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் குரூப் 2ல் இடம்பெறும்.
சுப்பர் எட்டு ஆட்டத்தின் போது அணிகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடும், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு அணிகள் நிகழ்வின் அரையிறுதி நிலைக்கு தகுதி பெறும்.
சுப்பர் எட்டு போட்டி நடைபெறும் இடங்கள் வருமாறு, ஆன்டிகுவா, பார்படாஸ், செயின்ட் லூசியா மற்றும் செயின்ட் வின்சென்ட் ஆகிய இடங்களில் 12 ஆட்டங்களும் நடைபெறவுள்ளன.