இலங்கையில் விவசாயத்திற்கென Geo- Goviya என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த செயலி ஊடாக விவசாயிகள் தமது செய்கை தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் பெறக்கூடிய சேவைகள் தொடர்பான தகவல்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன், நாட்டிலுள்ள விவசாய நிலங்கள் தொடர்பிலான சரியான வரைபடத்தை உள்ளீடு செய்யும் பணியும் இந்த செயலி ஊடாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கமைய திணைக்களத்தினால் 1.91 ஹெக்டேயர் விவசாய நிலம் இதுவரை கணக்கிடப்பட்டள்ளது.
அத்துடன் 1.38 விவசாயிகள் Geo- Goviya செயலி ஊடாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.