மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாமற்றும் இலங்கையில் உள்ள 21 கங்கைகளின் புனித தீர்த்தங்கள் மட்டு கல்லடி மாரியமன் ஆலையத்தில் இருந்து திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமர் சந்நிதான கயிலைப்புனிதர், முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் 20 சுவாமிகள் நேற்று திங்கட்கிழமை (17) மாலை வேளையில் திருச்செந்தூர் ஆலையத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
எதிர்வரும் 20 ம் திகதி மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலய கும்பாபிஷேகம் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள பிரபலமான பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து இந்தியாவின் கங்கை முதலான 12 புனித தீர்தங்களும் இலங்கையில் உள்ள திருக்கேதீஸ்வரம் பாலாவி முதலான 9 புனித தீர்தங்களும் கொண்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது.
இந்த புனித தீர்தங்களுடன் மதுரை அருள்மிகு ஸ்ரீறி மீனாட்சி அம்மன் ஆலைய தெய்வ நெறிகளாக தலைவர் சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி சுவாமி, திருவண்ணாமலை சடைச்சசாமி ஆச்சிரம 5 வது மடாதிபதி தவத்திரு திருப்பாத சுவாமிகள், திருநெல்வேலி ஸ்ரீமத் பரசமய கோளறிநாத 38 வது ஆதீன சன்னிதான ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பீட புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், இந்தியா அகில பாரதீய சன்னியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார்.
திருவண்ணாமலை சடைச்சசாமிகள், ஆச்சிரம தவத்திரு நிர்மாலானந்தர் சுவாமிகள் உட்பட 20 பேர் கொண்ட சுவாமிகள் இந்தியாவில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தங்கள் மற்றும் இலங்கையில் கங்கை முதலான புனித தீர்தங்கள் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலையத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து இந்தியா இலங்கை ஆதின மடாதிபதிகள் சந்நியாசிகள் தலைமையில் கலசங்களிலுள்ள புனித தீர்தங்கள் மற்றும் 108 முளைப்பாரிகள் பெண்களால் சிறப்பு பிராத்தனையுடன் அங்கிருந்து கல்லடி பிரதான வீதியை வந்தடைந்து பின்னர் சரவணா வீதியை சென்று நாவலடி வீதி ஊடாக நாதேஸ்வர வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக திருச்செந்தூர் முருகன் ஆலையத்துக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டது
அதனை தொடர்ந்து ஆதின சுவாமிகளை செம்கம்பள வரவேற்பளித்து கொண்டுவரப்பட்ட தீர்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டதுடன் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆதின மடாதிபதி சுவாமிகளிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.
இன்று புதன்கிழமை எண்ணைய்காப்பு சாத்தலை தொடர்ந்து 20 ம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்தியா இலங்கை பல ஆதின மடாதிபதிகள் முதல் முதல் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.