இலங்கையில் 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில், 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் நாட்டை ஆட்சி செய்த 3 ஜனாதிபதிகளும், 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தமையை தமி்ழ் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.”எனினும், அதில் எவ்வித நன்மைகளும் தமிழ்மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதினை தாம் அந்த சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்தாக அவர் கூறியுள்ளார்.
13 ஆம் திருத்தச்சட்டத்தில், உள்ள அதிகமான அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. அதன்காரணமாக வெற்றுக் கடதாசி போலுள்ள ஒரு சட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்பதையும் தாம் சுட்டிக்காட்டியதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.