நாளை (21) பொசன் போய தினம் என்பதால், சிறைக்கைதிகளை சந்திக்க வருபவர்களை திறந்த வெளியில் பார்வையிட சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, உறவினர்களால் சிறைக்கைதிகளுக்கு உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கைதிகளை பார்வையிட வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.