மறுஅறிவிப்பு வரும் வரை அரபிக்கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக கரை அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அரபிக்கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதுடன் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயம் காணப்படுவதாகவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.06) அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. சுமார் 100 கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.