சீதுவை பிரதேசத்தில் அமைந்துள்ள கொரியர் பொதிகள் சேவை நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் 06 பொதிகளை விசாரணைக்காக நிறுத்தி வைத்தனர்.
இந்தப் பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தையில் வசிக்கும் சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் நடத்திய விசாரணையில் இவை போலி முகவரிகள் என உறுதி செய்யப்பட்டது. திறக்கப்பட்ட பொதிகளில் 2,030 கிராம் கொகெய்ன் மற்றும் 2,177 கிராம் குஷ் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 190 மில்லியனை அண்மித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் முடிவில், மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப்பொருட்கள் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.