Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் இலங்கைக்கு நிதி உதவி!

கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் இலங்கைக்கு நிதி உதவி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான ஆதரவை ஜப்பான் தொடர்ந்தும் நீடித்துள்ளது.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

கண்ணிவெடி பாதிப்பற்ற இலங்கையை உருவாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேகி இதன்போது தெரிவித்ததாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் 215.605 மில்லியன் சதுரமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக்க குமார தெரிவித்துள்ளார்.

23.23 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
யாழில் பாம்பு தீண்டிய பெண் உயிரிழப்பு!

யாழில் பாம்பு தீண்டிய பெண் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு