மிளகு, கருவா போன்ற வாசனை பொருட்கள் ஏற்றுமதி செய்த நாடு இன்று கஞ்சா ஏற்றுமதிக்கு இறங்கியிருப்பது கேவலமானது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் விசனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(07) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும்.
ஆனால் இந்நாட்டில் விலையும் கருவா ஏலம் கராம்பு போன்ற பொருட்களை தாண்டி இன்று சட்டவிரோத பொருட்கள் அதாவது கஞ்சா போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றது நாட்டிற்கே அவலம்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பட கைத்தொழில் துறையை பாதுகாப்பது சட்டம் மற்றும் உயரிய சபையின் பொறுப்பாகும்.
இந்த துறையே நாட்டில் உள்ளவர்களுக்கு பெறும் பங்கை வழங்குகின்றது.
இதற்கமைய பொருளாதார பிரச்சினை காரணமாக பலர் வேலைகளை இழந்துள்ளனர்.
இதனால் வேலை வாய்ப்பு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள் தமது தகுதிக்கு குறைந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.