ஆரம்ப சுகாதார சிகிச்சை பிரிவுகளை தரப்படுத்தல் 2024ம் ஆண்டுக்கான நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இரண்டு தேசிய விருதுகளை மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பெற்றுள்ளது.
சுகாதார சிகிச்சை பிரிவுகளை தரப்படுத்தல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில், பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-42.png)
தேசிய விருதினை பெற்று மாவட்டத்திற்கும், பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிங்கராஜா இனியன் தலைமையிலான வைத்திய அதிகாரிகள் நேற்றைய தினம் (01) கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-47.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-46.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-45.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-44.png)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/07/image-43.png)