லியோஸ்டிக் காலம் (Leostic period) 2024/25 ன் முதற்கட்டமாக லியோ கழகத்தினரால் கோயில் வருகை (Temple Visit) என்ற முதலாவது செயற்திட்டமானது 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 03 மணியளவில் ஆரம்பமானது.
இச்செயற்திட்டமானது கழகத்தின் புதிய தலைவரான பிரகாஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இச்செயற்திட்டத்தின் போது முதலாவதாக கிழக்கிழங்கை சுவிசேஷ தேவ சபையில் வழிபாட்டுடன் ஆரம்பமானதை தொடர்ந்து, ஸ்ரீ மங்கள ரஜ விகாரை மற்றும் மட்டக்களப்பு பெரிய பள்ளிவாசல் ஆகிய இடங்களை தரிசித்தது, இறுதியாக ஆனைப்பந்தி பிள்ளையார் கோவிலையும் தரிசித்து இனிதே நிறைவுற்றது.
இச்செயற்திட்டத்திற்கு மட்டக்களப்பு லியோ (Leo club of Batticaloa) கழக்கத்துடன், வின்சென்ட் பாடசாலை லியோ கழகம் (Leo club of Vincentites), சிசிலின்ஸ் பாடசாலை லியோ கழகம் (Leo club of Cecilians) மற்றும் மைக்கல் பாடசாலை லியோ கழகம் (Leo club of Michaellite) போன்ற பாடசாலை கழகங்களும் இணைந்து கொண்டன. மேலும் 30க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அதேசமயம் இந்த செயற்திட்டத்தின் போது சர்வமத கலாசார ஒன்றிணைப்பு பேணப்பட்டதுடன், மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஒரு நாளாக அமைந்திருந்ததாக கழக உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.