Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சகோதரியின் காணியை ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த இருவர் கைது!

சகோதரியின் காணியை ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த இருவர் கைது!

2 years ago
in செய்திகள்

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட இரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் புலம்பெயர்ந்து வெளிநாடொன்றில் வசித்து வருகின்றார்.அவர் தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக உரிமை மாற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், காணி மோசடி செய்த சகோதரியைக் கைது செய்தனர்.

அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரும் நேற்றுமுன்தினம் (01) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தராஜாவின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் 10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர் கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்தபோது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் முககவசம் அணிந்திருந்தார் என்றும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
Next Post
யாழில் திருகோணமலையை சேர்ந்த நால்வர் கைது; பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு!

யாழில் திருகோணமலையை சேர்ந்த நால்வர் கைது; பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு